153. கூத்தச் சுற்றத்தினர்! பாடியவர் : வண்பரணர். பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. திணை: பாடாண். துறை: இயன் மொழி. மழையணி குன்றத்துக் கிழவன், நாளும், இழையணி யானை இரப்போர்க்கு ஈயும், சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை, அடுபோர் ஆனா, ஆதன் ஓரி மாரி வண்கொடை காணிய, நன்றும் சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே; பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப், பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக் கூடுகொள் இன்னியம் கறங்க, ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?
புறநானூறு > பாடல்: 153
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக