157. ஏறைக்குத் தகுமே! பாடியவர் : குறமகள் இளவெயினி. பாடப்பட்டோன்: ஏறைக் கோன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது. தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும், பிறர்கை யறவு தான்நா ணுதலும், படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும், வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன் சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல், கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்: ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை, எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக், கட்சி காணாக் கடமான் நல்லேறு மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும் பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.
புறநானூறு > பாடல்: 157
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக