167. ஒவ்வொருவரும் இனியர்! பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை. நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், ஊறுஅறியா மெய் யாக்கை யடு. கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே! அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்; ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! நின்னை வியக்குமிவ் வுலகம்; அ·து என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.
புறநானூறு > பாடல்: 167
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக