189. உண்பதும் உடுப்பதும்! பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி (செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.) தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக் குமே; அதனால், செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
புறநானூறு > பாடல்: 189
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக