198. மறவாது ஈமே! பாடியவர்: வடமவண்ணக்கண் பேரிசாத்தனார். பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. ``அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக், கடவுள் சான்ற, கற்பின் சேயிழை மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிக!`` என்று ஏத்தித், திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக், காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம், வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப், பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல் நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும், ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும் பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின் முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்! யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப் பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும், நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும், இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி, நீடு வாழிய! நெடுந்தகை; யானும் கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும், துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின் அடிநிழல் பழகிய வடியுறை; கடுமான் மாற! மறவா தீமே.
புறநானூறு > பாடல்: 198
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக