200. பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன் : விச்சிக்கோ திணை: அது. துறை: பரசிற்றுறை குறிப்பு: பாரி மகளிரை விச்சிக் கோனுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது. பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக் கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற் களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர் அடங்கா மன்னரை யடக்கும் மடங்கா விளையு ணாடுகிழ வோயே.
புறநானூறு > பாடல்: 200
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக