203. இரவலர்க்கு உதவுக! பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார் பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி திணை:பாடாண் துறை:பரிசில் கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும், எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின், முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல் இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்! இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும், உள்ளி வருநர் நசையிழப் போரே; அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.
புறநானூறு > பாடல்: 203
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக