204. அதனினும் உயர்ந்தது! பாடியவர்: கழைதின் யானையார். பாடப்பட்டோன்: வல் வில் ஓரி. திணை:பாடாண். துறை: பரிசில். ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர், கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே; ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச், சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும், உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்; புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற் புலவேன் வாழியர், ஓரி; விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.
புறநானூறு > பாடல்: 204
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக