214. நல்வினையே செய்வோம்! பாடியவர்: கோப்பெருஞ் சோழன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி `செய்குவம் கொல்லோ நல்வினை!’எனவே ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின், செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின், மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே,
புறநானூறு > பாடல்: 214
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக