221. வைகம் வாரீர்! பாடியவர்: பொத்தியார். பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது. பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே; ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே; அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே; திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே; மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; அனையன் என்னாது, அத்தக் கோனை, நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று; பைதல் ஒக்கல் தழீஇ, அதனை வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! ‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக், கெடுவில் நல்லிசை சூடி, நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.
புறநானூறு > பாடல்: 221
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக