232. கொள்வன் கொல்லோ! பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம். இல்லா கியரோ, காலை மாலை! அல்லா கியர், யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி, நார்அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ- கோடு உயர் பிறங்குமலை கெழீஇய நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?
புறநானூறு > பாடல்: 232
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக