239. இடுக, சுடுக, எதுவும் செய்க! பாடியவர்: பேரெயின் முறுவலார். பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. தொடி யுடைய தோள் மணந்தணன் ; கடி காவிற் பூச் சூடினன் ; தண் கமழுஞ் சாந்து நீவினன் ; செற் றோரை வழி தபுத்தனன் ; நட் டோரை உயர்பு கூறினன் ; வலியரென, வழி மொழியலன் ; மெலியரென, மீக் கூறலன்; பிறரைத் தான் இரப் பறியலன் ; இரந் தோர்க்கு மறுப் பறியலன் ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர் தாங்கினன் ; பெயர் படை புறங் கண்டனன் ; கடும் பரிய மாக் கடவினன் ; நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ; ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன்; மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்- இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!
புறநானூறு > பாடல்: 239
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக