289. ஆயும் உழவன்! பாடியவர்: கழாத்தலையார். திணை, துறை. தெரிந்தில. ஈரச் செவ்வி உதவின ஆயினும், பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி, வீறுவீறு ஆயும் உழவன் போலப், பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய மூதி லாளர் உள்ளும், காதலின் தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை, ‘இவற்கு ஈக !’ என்னும்; அதுவும்அன் றிசினே; கேட்டியோ வாழி_பாண! பாசறைப், ‘பூக்கோள் இன்று’ என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?
புறநானூறு > பாடல்: 289
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக