290. மறப்புகழ் நிறைந்தோன்! பாடியவர்: ஔவையார் திணை: கரந்தை துறை: குடிநிலையுரைத்தல் இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர் இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்! நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை, எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன் அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே: மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், உறைப்புழி ஓலை போல மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.
புறநானூறு > பாடல்: 290
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக