291. மாலை மலைந்தனனே! பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர் திணை: கரந்தை துறை: வேத்தியல் சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்; தூவெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும், விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்; என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_ கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை! மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!
புறநானூறு > பாடல்: 291
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக