294. வம்மின் ஈங்கு! பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார் திணை: தும்பை துறை: தானை மறம் வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்; கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக், குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து, இறையும் பெயரும் தோற்றி,”நுமருள் நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு” எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும் அரவுஉமிழ் மணியின் குறுகார்; நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.
புறநானூறு > பாடல்: 294
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக