309. என்னைகண் அதுவே! பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் திணை: தும்பை துறை : நூழிலாட்டு இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல்லரா உறையும் புற்றம் போலவும், கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்றருந் துப்பின் மாற்றோர், ‘பாசறை உளன்’ என வெரூஉம் ஓர்ஒளி வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.
புறநானூறு > பாடல்: 309
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக