314. மனைக்கு விளக்கு! பாடியவர்: ஐயூர் முடவனார் திணை: வாகை துறை : வல்லான் முல்லை மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன், முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை, நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப், புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க் குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து நிறையழிந்து எழுதரு தானைக்குச் சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.
புறநானூறு > பாடல்: 314
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக