339. வளரவேண்டும் அவளே! பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர் வீததை முல்லைப் பூப்பறிக் குந்து; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து; தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தற் பூக் குறூஉந்து; பைந்தழை துயல்வருஞ் செறுவிறற் .. .. .. .. .. . . ..லத்தி வளர வேண்டும், அவளே, என்றும்- ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி, முறஞ்செவி யானை வேந்தர் மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.
புறநானூறு > பாடல்: 339
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக