338. ஓரெயின் மன்னன் மகள்! பாடியவர்: குன்றூர் கிழார் மகனார் திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினத்தைப் பற்றிய குறிப்பு. ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின், படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின், நெடுவேள் ஆதன் போந்தை அன்ன, பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், கொற்ற வேந்தர் தரினும், தன்தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப் பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று உணங்குகலன் ஆழியின் தோன்றும் ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!
புறநானூறு > பாடல்: 338
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக