337. இவர் மறனும் இற்று! பாடியவர்: கபிலர் திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; கவிகை மண்ணாள் செல்வ ராயினும், வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர். வரலதோறு அகம் மலர . .. .. .. .. ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் பாரி பறம்பின் பனிச்சுனை போலக், காண்டற்கு அரியளாகி, மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு, மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே. அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக், காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும் கடுங்கண் யானை காப்பனர் அன்றி, வருத லானார் வேந்தர்; தன்னையர் பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல் குருதி பற்றிய வெருவரு தலையர் மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென யாரா குவர்கொல் தாமே - நேரிழை உருத்த பல்சுணங்கு அணிந்த மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?
புறநானூறு > பாடல்: 337
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக