336. பண்பில் தாயே! பாடியவர்: பரணர் திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே; கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்; ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; இயவரும் அறியாப் பல்லியம் கறங்க, அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்; அறன்இலன் மன்ற தானே-விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் தகைவளர்த்து எடுத்த நகையடு, பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.
புறநானூறு > பாடல்: 336
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக