342. வாள்தக உழக்கும் மாட்சியர்! பாடியவர்: அரிசில் கிழார் திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி ‘கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள், ஏனோர் மகள்கொல் இவள்?’ என விதுப்புற்று, என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை; திருநயத் தக்க பண்பின் இவள் நலனே பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின், ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம், தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும் பெறாஅ மையின் பேரமர் செய்தலின், கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா, வாள்தக வைகலும் உழக்கும் மாட்சி யவர் இவள் தன்னை மாரே.
புறநானூறு > பாடல்: 342
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக