344. இரண்டினுள் ஒன்று! பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி (திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர், பறந்தெழுந்து, துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு, நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ; புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ; இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே, காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .- கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.
புறநானூறு > பாடல்: 344
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக