345. பன்னல் வேலிப் பணை நல்லூர்! பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி (திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) களிறு அணைப்பக் கலங்கின, காஅ; தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு; மா மறுகலின் மயக்குற்றன, வழி; கலங் கழாஅலின், துறை கலக்குற்றன; தெறல் மறவர் இறை கூர்தலின், பொறை மலிந்து நிலன் நெளிய, வந்தோர் பலரே, வம்ப வேந்தர், பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின் ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக், கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, மையல் நோக்கின், தையலை நயந்தோர் அளியர் தாமே; இவள் தன்னை மாரே செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி, ‘நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்’ எனக்; கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினும், அன்னோ ! என்னா வதுகொல் தானே- பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!
புறநானூறு > பாடல்: 345
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக