368. பாடி வந்தது இதற்கோ? பாடியவர்: கழாத் தலையார் பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் திணை: வாகை துறை: மறக்களவழி குறிப்பு: இவன், சோழன் வேற்ப·றடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது, களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா முன்னர், அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள். களிறு முகந்து பெயர்குவம் எனினே. ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக், கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன; கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே; கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே; கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே, மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி, வளிவழக் கறுத்த வங்கம் போலக் குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க முகவை இன்மையின் உகவை இன்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து, ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ ! கடாஅ யானைக் கால்வழி யன்னவென் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப், பாடி வந்த தெல்லாம், கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்தநின் அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.
புறநானூறு > பாடல்: 368
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக