379. இலங்கை கிழவோன்! பாடியவர்: புறத்திணை நன்னாகனார் பாடப்பட்டோன்: ஓய்மான்வில்லியாதன் திணை:பாடாண் துறை: பரிசில் யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை; அவனே பெறுக, என் நாஇசை நுவறல்; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின், பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து, அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லி யாதன் கிணையேம்; பெரும! குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்! நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா, வல்லன், எந்தை, பசிதீர்த்தல்’ எனக், கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக், கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது. விண்தோய் தலைய குன்றம் பிற்பட, ‘ . . . . ரவந்தனென், யானே- தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத் திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.
புறநானூறு > பாடல்: 379
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக