அறிவரு ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே. 7
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1009
They know not to reach Him by Jnana Divine; They seek Him by ways of senses, in vain; If within you, you constant seek Him in right way, You shall indeed be in Nadanta.
அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறி வாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.