இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம் மருளறி யாமையும் மன்னும் அறிவு மருளிவை விட்டெறி யாமை மயங்கும் மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே. 8
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1010
Light and Darkness together are in heart; So does it seek Grace and Ignorance at once; The knowledge within of Jiva is bereft of Light; Except those who have Divine Jnana attained, The rest despair of dispelling Darkness.
ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.