நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமவற ஆதி நாடுவது அன்றாம் சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே. 11
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1013
Jiva has "Na" and "Ma" for its seats Siva has "Si" and "Va" that leads you to Him Be rid of "Na" and "Ma" And seek Primal One; He will be yours at once; The State of Mauna leads to Siva Becoming That to reach is Liberation True.
`நம` என்பதை அடிநிலையாகக் கொண்டு பசுவாய் நிற்கின்ற உயிரே. `சிவ` என்பதனை அடிநிலையாகக் கொள்ளும் நிலை கிடைக்கப்பெறுமாயின், சிவத்தோடு ஒன்றிப் பதியாய்விடும். ஆதலால், நகார மகாரங்களால் குறிக்கப் பெறுகின்ற திரோதாயியும், மலமும் அறுவதற்கு வழி அவற்றை முதலாகக் கொண்டு ஓதுவதன்று; மற்று, சிகார வகாரங்களை முதலாகக் கொண்டு ஓதுதலேயாகும். அவ்வாறு செபித்தல் பரமுத்திக்கு வாயிலாம்.