தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும் ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 12
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1014
Centers Yoga its consummation reaches In Nectar's flow in Center Seventh; In the Eighth is revealed the Jnana Light; Then beyond in the Eleventh In Paraparam the Supreme; Then beyond, beyond is Void, The Dvadasanda Space Infinite.
`சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.