மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள் கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 3
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1017
Breath through Sushumna coursing, Kundalini fire blazed aloft; Light on top emanated, Pervaded world, And engulfed entire cosmic space That I saw in me, and sought within.
பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத் தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந் திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.