மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின போது திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 13
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 7. பூரண சக்தி > பாடல்: 1137
As flower and its fragrance Siva and Sakti stood form resembling This they know not; When together they stirred the Primordial Bindu For creation to commence, He in Thought was one with Her Thus it was, My Father stood.
சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.