சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 14
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 7. பூரண சக்தி > பாடல்: 1138
Siva-Sakti who in Thought, Thus commenced devolution As Bindu and Nada expanded; She wears the orb of moon As on Her matted locks She is Sathavi, of Sattva Guna possessed She is the Beginning and End Thus is Her Form Divine.
மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.