அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும் இம்மனை செய்த இன்னில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்து நின்றானே. 99
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1253
She is Mother of Heavenly Home She is Mistress Supreme, Manonmani; She fashions Holy Home And stands as Lady Divine; She, Maya, fashioned this body, And in this Body Home too She abides.
சிவனுக்கு அழகிய மனைவியும், உயிர்களுக்குத் தாயும் ஆகிய சத்தி, உயிர்களின் பல்வேறு நிலைகளிலும் அவற்றிற்கு ஆதாரமாய் நின்று, வேண்டுவனவற்றை வழங்குபவளாயும் இருப்பாள். அதனால், இன்று நமக்கு ஆதாரமாய் நிற்கின்ற நிலமகளும் அந்தச் சிவசத்தியாகவே எனக்குத் தோன்றுகின்றாள்.