பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த வியமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 4
திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 5. சரியை > பாடல்: 1446
They who follow path of Chariya are Bhaktas; In Kriya the devoted souls wear holy emblems, They who practise Iyama and the rest are Yogis; And they who reach Siva Jnana are Jnana Siddhas true.
சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில் நிற்போர் அணுக்கத் தொண்டு செய்யும் அத்தகுதியை யுடைய `தொண்டர்` என்றும், இயமம் முதலிய யோக நிலைகளில் நிற்போர் `சாதகர்` என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.