குறுந்தொகை | Kurunthogai

நெய்தல் - தலைவி கூற்று

யாதுசெய் வாங்கொல் தோழி நோதக
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவிற் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே.
 -கச்சிப்பேட்டு நன்னாகையார்.

குறுந்தொகை > நூல் > பாடல்: 197

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Apr 09, 2026