110. யாமும் பாரியும் உளமே! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: நொச்சி. துறை: ..மகள் மறுத்தல். சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும். கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே; முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே; குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.
புறநானூறு > பாடல்: 110
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக