113. பறம்பு கண்டு புலம்பல்! பாடியவர் : கபிலர். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம். மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி, நட்டனை மன்னோ, முன்னே; இனியே, பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று, நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே! கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர் நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.
புறநானூறு > பாடல்: 113
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக