115. அந்தோ பெரும நீயே! பாடியவர் : கபிலர் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை சிறப்பு : பறம்பின் வளமை. ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், வாக்க உக்க தேக் கள் தேறல் கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல், அண்ணல் யானை, வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
புறநானூறு > பாடல்: 115
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக