125. புகழால் ஒருவன்! பாடியவர் : வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார். பாடப்பட்டோன்: தேர்வண் மலையன். திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற் கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர். பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை, பரூஉக் கண் மண்டை யடு, ஊழ்மாறு பெயர உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே, நள் ளாதார் மிடல் சாய்ந்த வல்லாள ! நின் மகிழிருக் கையே உழுத நோன் பகடு அழிதின் றாங்கு நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே; குன்றத் தன்ன களிறு பெயரக், கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே; ‘வெலீஇயோன் இவன்’ எனக் ‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு விரைந்து வந்து, சமந் தாங்கிய, வல்வேல் மலையன் அல்லன் ஆயின் நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு’ எனத், தோற்றோன் தானும், நிற்கூ றும்மே, ‘தொலைஇயோன் அவன்’ என, ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு இருக்கை சான்ற உயர் மலைத் திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.
புறநானூறு > பாடல்: 125
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக