124. வறிது திரும்பார்! பாடியவர் : கபிலர். பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திணை: பாடாண். துறை: இயன் மொழி. நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப், பதனன்று புக்குத், திறனன்று மொழியினும், வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப் பாடு ஆன்று, இரங்கும் அருவிப் பீடு கெழு மலையற் பாடி யோரே.
புறநானூறு > பாடல்: 124
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக