138. நின்னை அறிந்தவர் யாரோ? பாடியவர் : மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை. ஆனினம் கலித்த அதர்பல கடந்து, மானினம் கலித்த மலையின் ஒழிய, மீளினம் கலித்த துறைபல நீந்தி, உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! நீயே, பேரெண் ணலையே; நின்இறை, ’மாறி வா’ என மொழியலன் மாதோ; ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின், நின்னை வருதல் அறிந்தனர் யாரே!
புறநானூறு > பாடல்: 138
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக