139. சாதல் அஞ்சாய் நீயே! பாடியவர் : மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி. சுவல் அழுந்தப் பல காய சில் லோதிப் பல்இளை ஞருமே, அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலிய ருமே, வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்; ஓடாப் பூட்கை உரவோர் மருக! உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக், கனிபதம் பார்க்கும் காலை யன்றே; ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள், அருஞ் சமம் வருகுவ தாயின், வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே
புறநானூறு > பாடல்: 139
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக