162. இரவலர்அளித்த பரிசில்! பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன் : இளவெளிமான். திணை: பாடாண். துறை: பரிசில் விடை. சிறப்பு : புலவர் பெருமிதம். இரவலர் புரவலை நீயும் அல்லை! புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க் கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானை எம் பரிசில்; கடுமான் தோன்றல்! செல்வல் யானே.
புறநானூறு > பாடல்: 162
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக