163. தமிழ் உள்ளம்! பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன் : புலவரின் மனைவி. திணை: பாடாண். துறை: பரிசில். நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும், கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும், இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது, வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே! பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.
புறநானூறு > பாடல்: 163
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக