164. வளைத்தாயினும் கொள்வேன்! பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். பாடப் பட்டோன்: குமணன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை. குறிப்பு: தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது. [பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)] ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப், பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி, நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, நிற்படர்ந் திசினே-நற்போர்க் குமண! என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ், மண்ணமை முழவின், வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.
புறநானூறு > பாடல்: 164
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக