181. இன்னே சென்மதி! பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார். பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன். திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை. மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில், கருங்கண் எயிற்றி காதல் மகனொடு, கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப், புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை, வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்; உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின், இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன் பகைப்புலம் படரா அளவை, நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.
புறநானூறு > பாடல்: 181
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக