182. பிறர்க்கென முயலுநர்! பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
புறநானூறு > பாடல்: 182
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக