183. கற்கை நன்றே! பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், ‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,
புறநானூறு > பாடல்: 183
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக